Posts

Showing posts from January, 2023

Documents required for marriage registration

Proof of age, proof of residence, proof of identity of witnesses and proof of marriage must be submitted at the time of marriage registration at the Registrar's office.  Birth certificate, school and college certificates, passport can be submitted as proof of age.  Passport, voter ID card, driving license, family card can be submitted as proof of residence.  One of the above documents for proof of residence (passport, voter ID card, driving license, family card) can be submitted as proof of identity for witnesses.  Marriage Hall Receipt, Temple Receipt, Mosque or Church Certificate and Marriage invitation card are accepted as documents of marriage.  www.registermarriages.in

திருமணப் பதிவிற்கு தேவைப்படும் ஆவணங்கள்

வயதுச் சான்று, இருப்பிடச் சான்று, சாட்சிகளின் அடையாளச் சான்று மற்றும் திருமணம் நடைபெற்றதற்கான சான்றுகள் திருமணப் பதிவின் போது அரசு சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.    பிறப்புச் சான்றிதழ், பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள், கடவுச் சீட்டு ஆகியனவற்றுள் ஏதாவது ஒன்றை வயதுச் சான்றுக்கான ஆவணமாக சமர்ப்பிக்கலாம்.    கடவுச் சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை ஆகியனவற்றுள் ஏதாவது ஒன்றை இருப்பிடச் சான்றுக்கான ஆவணமாக சமர்ப்பிக்கலாம்.    மேற்கண்ட இருப்பிடச் சான்றுக்கான ஆவணங்களில் ஒன்றை (கடவுச் சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை) சாட்சிகளுக்கான அடையாளச் சான்றுக்கான ஆவணமாக சமர்ப்பிக்கலாம்.    திருமண மண்டப ரசீது , கோவில் ரசீது, மசூதி அல்லது தேவாலயத்தில் வழங்கப்படும் சான்றிதழ் மற்றும் திருமணப்பத்திரிகை ஆகியன திருமணம் நடைபெற்றதற்கான ஆவணங்களாக ஏற்கப்படும்.     www.registermarriages.in

Importance of Marriage Registration

Registration of a marriage at the government sub-registrar's offices has become a necessity in modern times. We have reached a point where marriages that are not registered and obtain a government marriage certificate are not legally recognized. As per the Tamil Nadu Marriage Registration Act - 2009, non-registration of marriage is a punishable offence. In fact, it is good for society that civil marriages are formalized and documented. It will help prevent many abuses and make it easier for women and men to get their legal rights. Even seniors above seventy years of age require a marriage certificate today. If a person living abroad wants to bring his parents to live with him, it has become necessary to submit the parents' marriage certificate to establish that they are his parents. Marriage certificate of parents is also required for enrolling children in school. A marriage certificate is required to include the name of the husband or wife on the family identity card. There is...

 திருமணப்பதிவின் முக்கியத்துவம்

ஒரு திருமணத்தை  அரசு சார்-பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்வது தற்போதய கால கட்டத்தில் அவசியத்தேவையாக மாறி விட்டது. பதிவு செய்து அரசு திருமணச்சான்றிதழ் பெறாத திருமணங்கள் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்படாது என்கிற நிலையை நாம் அடைந்து விட்டோம். தமிழ்நாடு திருமணப் பதிவுச்சட்டம் - 2009 இன் படி, திருமணத்தை பதிவு செய்யாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். உண்மையில், குடிமக்களின் திருமணங்கள் முறைப்படுத்தப்படுவதும், ஆவணப்படுத்தப்படுவதும் , சமூகத்திற்கு  நல்லது தான். பல முறைகேடுகளை தடுப்பதற்கும் , பெண்களும்  ஆண்களும் தமக்குரிய சட்ட  உரிமைகளை எளிதில் பெறுவதற்கும் இது உதவும்.  எழுபது வயதைக் கடந்த முதியவர்களுக்குக்கூட இன்று திருமனச் சான்றிதழ் தேவைப்படுகிறது. வெளிநாட்டில் வசிக்கும் ஒரு நபர் , தமது பெற்றோர்களை தம்முடன் வசிக்க அழைத்துக்கொள்ள விரும்பினால், அவரது பெற்றோர்கள்தான் என்பதை நிறுவ, பெற்றோர்களின்  திருமணச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியமாகி விட்டது. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பெற்றோர்களின் திருமணச் சான்றிதழ் கோரப்படுகிறது. குடும்ப அடையாள அட்டையில...

Marriage Age

According to Indian law, a man who has completed 21 years of age and a woman who has completed 18 years of age are eligible to marry. Foreigners who have completed the above age can also get married in India. This Marriage Age Act has been in force in our country since 1978. Before 1978, the age of marriage in India was 18 for men and 14 for women. A bill to increase the marriageable age for women from the current 18 to 21 has been introduced in the Indian Parliament and is pending due to opposition from opposition parties and social activists. As it stands, the marriageable age for women continues to be 18. A marriage between a woman or a man who has not reached the age of maturity is not legally valid. Also, under the Child Marriage Prohibition Act, persons responsible for underage marriages will be prosecuted and arrested. There is also the possibility of prosecution against the parents. www.registermarriages.in

திருமண வயது

இந்திய சட்டப்படி , 21 வயது நிறைவடைந்த ஆணும் , 18 வயது பூர்த்தியடைந்த பெண்ணும் திருமணம் செய்து கொள்ள தகுதி பெற்றவர்கள். மேற்கண்ட வயதினை பூர்த்தியடைந்த வெளிநாட்டினரும் இந்தியாவில்  திருமணம் செய்து கொள்ளலாம்.    இந்த திருமண வயதுச் சட்டம் கடந்த 1978 ஆம் ஆண்டு முதல் நம் நாட்டில் அமலில் உள்ளது . 1978 ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் திருமண வயது ஆணுக்கு 18 ஆகவும் , பெண்ணுக்கு 14 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.    பெண்களுக்கான திருமண வயதை தற்போதுள்ள 18 லிருந்து 21 ஆக அதிகரிக்க வேண்டும் என்கிற சட்ட மசோதா இந்திய பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு , எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பு காரணமாக நிலுவையில் இருக்கிறது. தற்போதுள்ள நிலையில் பெண்ணின் திருமண வயது 18 ஆகவே தொடர்கிறது .    உரிய வயதை அடையாத பெண்ணுக்கோ ஆணுக்கோ திருமணம் நடந்தால் அது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல. மேலும் குழந்தைத் திருமனத் தடைச் சட்டத்தின் அடிப்படையில் உரிய வயதை பூர்த்தியடையாதவர்களின் திருமணத்திற்கு காரணமான நபர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு கைது செய்யப்படுவார்கள் . பெற்றோர்கள் ...

A variety of birds ; One way of each

 A variety of birds; One way of each: "Life is very beautiful. So are you, Ravinder Chandrasekaran," actress Mahalakshmi has posted on social media with a photo taken with her husband. It may be recalled that the marriage between filmmaker Ravinder Chandrasekaran and actress Mahalaxmi met with massive criticism a few months back. Many people commented on social media that it is not fair that Ravinder Chandrasekaran married the beautiful Mahalakshmi to the overweight man. Many people poured out their opinions that Mahalakshmi had agreed to the marriage for money. Ravinder Chandrasekaran denied all this. He explained that both fell in love and got married. After the wedding, both of them have been sharing their pictures from abroad on social media. We saw one such sharing at the beginning of the post. Their fans who have seen the post have congratulated both of them by posting posts saying that your love is also beautiful. Their love also proved that there is no such thing as c...

பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம்.

"வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கிறது . நீங்களும் அப்படித்தான் ரவீந்தர் சந்திரசேகரன்" என்று தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தோடு சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியோடு பதிவிட்டிருக்கிறார் நடிகை மகாலட்சமி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் - நடிகை மகாலட்சமி திருமணம் பெரிய அளவிலான விமர்சனங்களைச் சந்தித்தது நினைவிருக்கலாம். அழகான மகாலட்சமியை அதிக பருமனான உடல் தோற்றம் கொண்ட ரவீந்தர் சந்திரசேகரன் மணந்தது நியாயமில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலர் கருத்துத்தெரிவித்தனர். பணத்துக்காகவே திருமணத்துக்கு மகாலட்சுமி சம்மதித்திருக்கிறார் என்றெல்லாம் தங்கள் கருத்துப் பொக்கிஷங்களை பலர் கொட்டித் தீர்த்தனர். இதையெல்லாம் ரவீந்தர் சந்திரசேகரன் மறுத்தார். இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதாக விளக்கம் அளித்தார். திருமணத்துக்குப் பிறகு வெளிநாடுகளில் சுற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் இருவரும் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட பகிர்வுகளில் ஒன்றைத்தான் பதிவின் தொடக்கத்தில் நாம் பார்த்தோம். அந்த பதிவைப் பா...

Marriage age controversy

We are going to examine a question that was raised in the Parliament of India a few days ago. You have also read it in newspapers. It is not a crime under Indian law for a man and a woman to have sex of their own free will. They may have sex with someone other than their husband or wife, even if they are married to someone else. This is one of the dark sides of our country where the custodians of culture are the rulers. What else can you do but feel sorry for?! Well, let it be. Let's get to the point. So will the age limit be lowered to allow anyone to have sex with anyone they want? , asks a written question in Parliament. Yes, this is a question raised by a Member of Parliament. The minister replied that the government has no plan to reduce the age limit. It is noteworthy that the bill to raise the age limit for marriage is pending in the same parliament. What are perverse thoughts? Marriage age should be increased; The age limit for non-marital sex should be lowered. India is mo...

திருமண வயது சர்ச்சை 

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட  ஒரு கேள்வி குறித்து ஆராய இருக்கிறோம். நீங்களும் செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். ஒரு ஆணும் பெண்ணும் தாங்களாகவே விரும்பி உடலுறவு வைத்துக்கொள்வது இந்திய சட்டப்படி குற்றமில்லை. அவர்கள் வேறு ஒருவருடன் திருமண பந்தத்தில் இருந்தாலும், தன் கணவன் அல்லது மனைவி அல்லாத மற்றொரு நபருடன் உடலுறவு வைத்துக்கொள்ளலாம்.  கலாச்சாரத்தின் பாதுகாவலர்களை ஆட்சியாளர்களாகக் கொண்ட நம் நாட்டின் இருண்ட பக்கங்களில் இதுவும் ஒன்று. வருத்தப்படுவதைத்தவிர வேறென்ன செய்து விட முடியும்?!  சரி, இருக்கட்டும். இப்போதைய விசயத்திற்கு  வருவோம்.  இவ்வாறு யாரும் யாருடனும் விரும்பினால் உடலுறவு கொள்ள அனுமதிப்பதற்கு வயது வரம்பு குறைக்கப்படுமா? என்று , பாராளுமன்றத்தில் எழுத்து மூலமாக எழுப்பப்பட்ட  கேள்வி ஒன்று வினவுகிறது . ஆம் , பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விதான் இது. அவ்வாறு வயது வரம்பை குறைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் தற்போதைக்கு இல்லை என்று அமைச்சர் பதிலளித்து விட்டார். திருமணத்திற்கான வயது வரம்பை அதிகரிக்க வ...

 Marriages in the month of Margazhi which is one of the Tamil months

Our forefathers used to celebrate various spiritual festivals in the month of Margazhi. They avoided holding wedding events in the month of Margazhi only for the reason that such festival celebrations should not be disturbed. But now they are leading to superstitions by creating a myth that if you marry in the month of Margazhi, there will be no fertility and it is a bad month. It cannot be forgotten that our forefathers were the ones who rejected such superstitions and led an intellectual life. In other words, our forefathers chose the month of Margazhi as the best month of the 12 months. In the month of Margazhi, they used to wake up early in the morning and bathe in the cold water like a duty. Be that as it may, today's younger generation is the vanguard of progress. Marriages taking place in the month of Margazhi and marriage registrations are proof of this. "Do not curse time; I am time." It is worth noting that Prophet Muhammad mentions that God says. www.registerma...

மார்கழி மாதத்தில் திருமணங்கள்

மார்கழி மாதத்தில் ஆன்மீக ரீதியான பல்வேறு விழாக்களை நம் முன்னோர்கள் கொண்டாடினார்கள். இத்தகைய விழா கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்கிற காரணத்திற்காக மட்டுமே மார்கழி மாதத்தில் திருமண நிகழ்வுகளை நடத்துவதை தவிர்த்தார்கள். ஆனால் தற்போது மார்கழி மாதத்தில் திருமணம் செய்தால் வம்சவிருத்தி ஏற்படாது என்றும் பீடை மாதம் என்றும் கருத்துத்திரிபை உருவாக்கி மூடநம்பிக்கையை நோக்கி அழைத்துச் செல்கிறார்கள். நம் முன்னோர்கள் இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளை புறம் தள்ளி அறிவு ரீதியான வாழ்வியலை மேற்கொண்டவர்கள் என்பதை மறக்க இயலாது. இன்னும் சொல்லப்போனால் 12 மாதங்களில் மிகச்சிறந்த மாதமாக மார்கழி மாதத்தையே நம் முன்னோர்கள் தேர்வு செய்து இருக்கிறார்கள். மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடுவதை ஒரு கடமையைப் போலவே செய்து வந்தார்கள். எது எப்படி இருப்பினும் தற்போதைய இளைய சமூகம் முற்போக்கிற்கான முன்னோடியாக இருப்பது கண் கூடு. மார்கழி மாதத்தில் நடைபெற்று வரும் திருமணங்களும் திருமண பதிவுகளும் இதற்குச் சான்றாகும். "காலத்தை ஏசாதீர்கள் (திட்டாதீர்கள்); நானே காலமாக இருக்கிறேன்." என்று ...

Conversion for marriage

In India, the Constitution of India enumerates as one of the fundamental rights that an individual can practice the religion of his choice, convert to any religion of his choice or remain independent of any religion. Even if a person belonging to Dalit or Scheduled Caste gets a government job through reservation, even if he converts to another religion of his choice, the government job which he got through the privilege while he belonged to the previous religion will not be lost. Things like these will make us realize how much our constitution has valued religious freedom to choose the religion of choice. Similarly, if a man and a woman of suitable age want to marry, even their parents cannot stop the marriage. Whether they belong to the same caste and religion or to different castes and religions, the eyes of the law are equal. This is one of the most honorable rights enshrined in the Constitution of India. But in recent times, some state governments ruled by the Bharatiya Janata Part...

திருமணத்திற்காக மதம் மாறுதல்

இந்தியாவில் ஒரு தனி மனிதன் தான் விரும்பிய மதத்தை பின்பற்றுவதை , தான் விரும்பிய மதத்திற்கு மாறுவதை அல்லது எந்த மதத்தையும் சாராமல் இருப்பதை, அடிப்படை உரிமைகளில்  ஒன்றாக இந்திய அரசியல் சட்டம் பட்டியலிடுகிறது .  ஒரு தலித் அல்லது பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் தமக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு சலுகை மூலம் அரசு வேலை ஏதாவது பெற்றுக்கொண்ட பிறகும் , தான் விரும்பிய வேறு ஒரு மதத்திற்கு மாறினால் கூட, முந்தைய மதத்தில் இருந்த  போது கிடைக்கப்பெற்ற சலுகை மூலம் அடைந்த அரசு வேலை பறி போகாது. இது போன்ற விஷயங்கள் , நமது அரசியல் அமைப்புச் சட்டம் , விரும்பிய மதத்தைத் தேர்வு செய்யும் மதத் தேர்வுரிமையை எந்த அளவுக்கு மதிப்பு மிக்கதாக்கியிருக்கிறது என்பதை நமக்கு உணர்த்தும். அதே போன்று உரிய வயதை அடைந்த ஒரு ஆணும் பெண்ணும் விரும்பி திருமணம் செய்து கொண்டால், அத்திருமணத்தை அவர்களது பெற்றோர்கள் கூட தடுத்து விட முடியாது. அவர்கள் ஒரே ஜாதியை , மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், வெவ்வேறு ஜாதிகளை, மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டத்தின் பார்வை சமமானது. இதுவும் இந்திய அரசியல் சட்டம் வகுத்தளித்துள்ள ...

Register Marriage

Register marriages are usually conducted in the offices of the Sub - Registrar's in the presence of the District Registrar. Register marriages can only take place under the Special Marriage Act. Thirty days in advance, the bride and groom who want to have a register marriage should come to the Registrar's office and give notice. The notice so given shall be affixed for thirty days on the notice board of the Registrar's offices along with the photographs of the bride and groom desiring to be married. The notice shall be posted in both the Registrar's Offices within the residential limits of both the bride and groom. After thirty days, after the proper no objection certificate is issued, both the bride and groom can come to the registrar's office with three witnesses and get married and get the government marriage certificate. It should be noted that at least thirty days from the date of notification is required to complete a register marriage. It is only in movies t...

பதிவுத் திருமணம்

பதிவுத் திருமணங்கள் பொதுவாகஅரசு சார்பதிவாளர் அலுவலகங்களில் மாவட்டப் பதிவாளர் முன்னிலையில் நடத்தப்படுகின்றன. சிறப்புத் திருமனச் சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே பதிவுத் திருமணங்கள் நடைபெற முடியும். முப்பது நாட்களுக்கு முன்னதாகவே , பதிவுத் திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமக்கள் சார்பதிவாளர் அலுவலகம் வந்து , அறிவிப்பு கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கப்படும் அறிவிப்பு, பதிவுத் திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமக்கள் புகைப்படங்களுடன் சார்பதிவாளர் அலுவலகங்களின் அறிவிப்புப் பலகையில் முப்பது நாட்கள் வரை ஒட்டி வைக்கப்படும். மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரின் இருப்பிட எல்லைகளுக்குட்பட்ட இரு சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இந்த அறிவிப்பு ஒட்டப்படும். முப்பது நாட்களுக்குப் பிறகு, உரிய தடையில்லாச்சான்று வழங்கப்பட்ட பின்பு மணமக்கள் இருவரும் மூன்று சாட்சிகளுடன் பதிவாளர் அலுவலகம் வந்து , திருமணம் செய்து கொண்டு அரசு திருமனச் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். ஒரு பதிவுத் திருமணத்தை நடத்தி முடிக்க அறிவிப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து குறைந்த பட்சம் முப்பது நாட்கள் அவகாசம் தேவைப்படும் என்பதை நினைவில் கொள்...