திருமணப் பதிவிற்கு தேவைப்படும் ஆவணங்கள்

வயதுச் சான்று, இருப்பிடச் சான்று, சாட்சிகளின் அடையாளச் சான்று மற்றும் திருமணம் நடைபெற்றதற்கான சான்றுகள் திருமணப் பதிவின் போது அரசு சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

 
பிறப்புச் சான்றிதழ், பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள், கடவுச் சீட்டு ஆகியனவற்றுள் ஏதாவது ஒன்றை வயதுச் சான்றுக்கான ஆவணமாக சமர்ப்பிக்கலாம். 
 
கடவுச் சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை ஆகியனவற்றுள் ஏதாவது ஒன்றை இருப்பிடச் சான்றுக்கான ஆவணமாக சமர்ப்பிக்கலாம். 
 
மேற்கண்ட இருப்பிடச் சான்றுக்கான ஆவணங்களில் ஒன்றை (கடவுச் சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை) சாட்சிகளுக்கான அடையாளச் சான்றுக்கான ஆவணமாக சமர்ப்பிக்கலாம். 
 
திருமண மண்டப ரசீது , கோவில் ரசீது, மசூதி அல்லது தேவாலயத்தில் வழங்கப்படும் சான்றிதழ் மற்றும் திருமணப்பத்திரிகை ஆகியன திருமணம் நடைபெற்றதற்கான ஆவணங்களாக ஏற்கப்படும்.  
 

Comments

Popular posts from this blog

International Women's Day - History, Purpose and Practice

சர்வதேச பெண்கள் தினம் - வரலாறு, நோக்கம் மற்றும் நடைமுறை

Online search for Registered Marriages and apply for Marriage Certificate