திருமண வயது சர்ச்சை 

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட  ஒரு கேள்வி குறித்து ஆராய இருக்கிறோம். நீங்களும் செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். ஒரு ஆணும் பெண்ணும் தாங்களாகவே விரும்பி உடலுறவு வைத்துக்கொள்வது இந்திய சட்டப்படி குற்றமில்லை. அவர்கள் வேறு ஒருவருடன் திருமண பந்தத்தில் இருந்தாலும், தன் கணவன் அல்லது மனைவி அல்லாத மற்றொரு நபருடன் உடலுறவு வைத்துக்கொள்ளலாம்.  கலாச்சாரத்தின் பாதுகாவலர்களை ஆட்சியாளர்களாகக் கொண்ட நம் நாட்டின் இருண்ட பக்கங்களில் இதுவும் ஒன்று. வருத்தப்படுவதைத்தவிர வேறென்ன செய்து விட முடியும்?!  சரி, இருக்கட்டும். இப்போதைய விசயத்திற்கு  வருவோம்.  இவ்வாறு யாரும் யாருடனும் விரும்பினால் உடலுறவு கொள்ள அனுமதிப்பதற்கு வயது வரம்பு குறைக்கப்படுமா? என்று , பாராளுமன்றத்தில் எழுத்து மூலமாக எழுப்பப்பட்ட  கேள்வி ஒன்று வினவுகிறது . ஆம் , பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விதான் இது. அவ்வாறு வயது வரம்பை குறைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் தற்போதைக்கு இல்லை என்று அமைச்சர் பதிலளித்து விட்டார். திருமணத்திற்கான வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று இதே பாராளுமன்றத்தில்தான் சட்ட முன் வடிவு கொண்டு வரப்பட்டு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. என்னே விபரீதமான சிந்தனைகள்? திருமண வயதை அதிகரிக்க வேண்டுமாம்; திருமண பந்தமில்லாமல் உடலுறவு கொள்வதற்கான வயது வரம்பை குறைக்க வேண்டுமாம் . சுதந்திரம் என்ற பெயரில் நிர்வாணத்தை நோக்கி நகர்கிறது இந்தியா. குடும்பவியலை சிதைப்பதற்கான சூழ்ச்சிகள் அரங்கேறுகின்றன.  விழி!

www.registermarriages.in

Comments

Popular posts from this blog

International Women's Day - History, Purpose and Practice

சர்வதேச பெண்கள் தினம் - வரலாறு, நோக்கம் மற்றும் நடைமுறை

Online search for Registered Marriages and apply for Marriage Certificate