திருமண வயது

இந்திய சட்டப்படி , 21 வயது நிறைவடைந்த ஆணும் , 18 வயது பூர்த்தியடைந்த பெண்ணும் திருமணம் செய்து கொள்ள தகுதி பெற்றவர்கள். மேற்கண்ட வயதினை பூர்த்தியடைந்த வெளிநாட்டினரும் இந்தியாவில் 
திருமணம் செய்து கொள்ளலாம். 
 
இந்த திருமண வயதுச் சட்டம் கடந்த 1978 ஆம் ஆண்டு முதல் நம் நாட்டில் அமலில் உள்ளது . 1978 ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் திருமண வயது ஆணுக்கு 18 ஆகவும் , பெண்ணுக்கு 14 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
பெண்களுக்கான திருமண வயதை தற்போதுள்ள 18 லிருந்து 21 ஆக அதிகரிக்க வேண்டும் என்கிற சட்ட மசோதா இந்திய பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு , எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பு காரணமாக நிலுவையில் இருக்கிறது. தற்போதுள்ள நிலையில் பெண்ணின் திருமண வயது 18 ஆகவே தொடர்கிறது . 
 
உரிய வயதை அடையாத பெண்ணுக்கோ ஆணுக்கோ திருமணம் நடந்தால் அது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல. மேலும் குழந்தைத் திருமனத் தடைச் சட்டத்தின் அடிப்படையில் உரிய வயதை பூர்த்தியடையாதவர்களின் திருமணத்திற்கு காரணமான நபர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு கைது செய்யப்படுவார்கள் . பெற்றோர்கள் மீதும் வழக்குத் தொடர வாய்ப்பு உள்ளது.  

Comments

Popular posts from this blog

Chennai Register offices complete list

Online search for Registered Marriages and apply for Marriage Certificate

திருமணத்திற்காக மதம் மாறுதல்