பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம்.

"வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கிறது . நீங்களும் அப்படித்தான் ரவீந்தர் சந்திரசேகரன்" என்று தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தோடு சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியோடு பதிவிட்டிருக்கிறார் நடிகை மகாலட்சமி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் - நடிகை மகாலட்சமி திருமணம் பெரிய அளவிலான விமர்சனங்களைச் சந்தித்தது நினைவிருக்கலாம். அழகான மகாலட்சமியை அதிக பருமனான உடல் தோற்றம் கொண்ட ரவீந்தர் சந்திரசேகரன் மணந்தது நியாயமில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலர் கருத்துத்தெரிவித்தனர். பணத்துக்காகவே திருமணத்துக்கு மகாலட்சுமி சம்மதித்திருக்கிறார் என்றெல்லாம் தங்கள் கருத்துப் பொக்கிஷங்களை பலர் கொட்டித் தீர்த்தனர். இதையெல்லாம் ரவீந்தர் சந்திரசேகரன் மறுத்தார். இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதாக விளக்கம் அளித்தார். திருமணத்துக்குப் பிறகு வெளிநாடுகளில் சுற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் இருவரும் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட பகிர்வுகளில் ஒன்றைத்தான் பதிவின் தொடக்கத்தில் நாம் பார்த்தோம். அந்த பதிவைப் பார்த்த அவர்களது ரசிகர்கள் உங்கள் காதலும் அழகாக இருக்கிறது என்று பதிவுகள் வெளியிட்டு இருவருக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். பொதுவான அழகு என்று ஒன்று இல்லை என்பதை இவர்கள் காதலும் நிரூபித்திருக்கிறது. உலகப் புகழ் பெற்ற காதலர்கள் லைலா மஜ்னுவின் காதல் கதையும் இது போலத்தான். படித்துப்பாருங்கள், புரியும். கண்களும் ரசனைகளும் மாறுபட்டவை. ஒருவர் விரும்புவதை மற்றொருவர் விரும்ப மாட்டார். இறைவன் படைப்பின் புரிந்து கொள்ள முடியாத நியதிகளுள் இதுவும் ஒன்று.
www.registermarriages.in

Comments

Popular posts from this blog

International Women's Day - History, Purpose and Practice

சர்வதேச பெண்கள் தினம் - வரலாறு, நோக்கம் மற்றும் நடைமுறை

Online search for Registered Marriages and apply for Marriage Certificate