மார்கழி மாதத்தில் திருமணங்கள்

மார்கழி மாதத்தில் ஆன்மீக ரீதியான பல்வேறு விழாக்களை நம் முன்னோர்கள் கொண்டாடினார்கள். இத்தகைய விழா கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்கிற காரணத்திற்காக மட்டுமே மார்கழி மாதத்தில் திருமண நிகழ்வுகளை நடத்துவதை தவிர்த்தார்கள். ஆனால் தற்போது மார்கழி மாதத்தில் திருமணம் செய்தால் வம்சவிருத்தி ஏற்படாது என்றும் பீடை மாதம் என்றும் கருத்துத்திரிபை உருவாக்கி மூடநம்பிக்கையை நோக்கி அழைத்துச் செல்கிறார்கள். நம் முன்னோர்கள் இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளை புறம் தள்ளி அறிவு ரீதியான வாழ்வியலை மேற்கொண்டவர்கள் என்பதை மறக்க இயலாது. இன்னும் சொல்லப்போனால் 12 மாதங்களில் மிகச்சிறந்த மாதமாக மார்கழி மாதத்தையே நம் முன்னோர்கள் தேர்வு செய்து இருக்கிறார்கள். மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடுவதை ஒரு கடமையைப் போலவே செய்து வந்தார்கள். எது எப்படி இருப்பினும் தற்போதைய இளைய சமூகம் முற்போக்கிற்கான முன்னோடியாக இருப்பது கண் கூடு. மார்கழி மாதத்தில் நடைபெற்று வரும் திருமணங்களும் திருமண பதிவுகளும் இதற்குச் சான்றாகும். "காலத்தை ஏசாதீர்கள் (திட்டாதீர்கள்); நானே காலமாக இருக்கிறேன்." என்று இறைவன் கூறுவதாக முகமது நபிகள் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. www.registermarriages.in


Comments

Popular posts from this blog

International Women's Day - History, Purpose and Practice

சர்வதேச பெண்கள் தினம் - வரலாறு, நோக்கம் மற்றும் நடைமுறை

Online search for Registered Marriages and apply for Marriage Certificate