பதிவுத் திருமணம்

பதிவுத் திருமணங்கள் பொதுவாகஅரசு சார்பதிவாளர் அலுவலகங்களில் மாவட்டப் பதிவாளர் முன்னிலையில் நடத்தப்படுகின்றன. சிறப்புத் திருமனச் சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே பதிவுத் திருமணங்கள் நடைபெற முடியும். முப்பது நாட்களுக்கு முன்னதாகவே , பதிவுத் திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமக்கள் சார்பதிவாளர் அலுவலகம் வந்து , அறிவிப்பு கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கப்படும் அறிவிப்பு, பதிவுத் திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமக்கள் புகைப்படங்களுடன் சார்பதிவாளர் அலுவலகங்களின் அறிவிப்புப் பலகையில் முப்பது நாட்கள் வரை ஒட்டி வைக்கப்படும். மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரின் இருப்பிட எல்லைகளுக்குட்பட்ட இரு சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இந்த அறிவிப்பு ஒட்டப்படும். முப்பது நாட்களுக்குப் பிறகு, உரிய தடையில்லாச்சான்று வழங்கப்பட்ட பின்பு மணமக்கள் இருவரும் மூன்று சாட்சிகளுடன் பதிவாளர் அலுவலகம் வந்து , திருமணம் செய்து கொண்டு அரசு திருமனச் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். ஒரு பதிவுத் திருமணத்தை நடத்தி முடிக்க அறிவிப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து குறைந்த பட்சம் முப்பது நாட்கள் அவகாசம் தேவைப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒரே நாளில் பதிவுத் திருமணத்தை நடத்தி முடிப்பதெல்லாம் சினிமா படங்களில் மட்டுமே . மேலும் ஒரு பதிவுத் திருமணத்தை , மணமக்கள் இருவரின் வசிப்பிட எல்லைக்குட்பட்ட இரு சார்பதிவாளர் அலுவலகங்களில் ஏதாவது ஒன்றில் மட்டுமே நடத்த முடியும். வேறு சார்பதிவாளர் அலுவலகங்களில் நடத்த முடியாது. பதிவுத் திருமணம் செய்து கொள்ளும் இணையர்கள் ஒரே ஜாதியை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களாகவோ , வெவ்வேறு ஜாதிகளை அல்லது மதங்களைச் சேர்ந்தவர்களாகவோ இருக்கலாம். பதிவுத் திருமணம் செய்து கொள்வதற்கு பெற்றோர்கள் அல்லது உறவினர்களின் ஒப்புதல் அவசியமில்லை. 18 வயதை பூர்த்தியடைந்த ஒரு பெண்ணும் 21 வயதை பூர்த்தியடைந்த ஒரு ஆணும் தாங்கள் விரும்பினால் பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம்.


Comments

Popular posts from this blog

Online search for Registered Marriages and apply for Marriage Certificate

திருமணத்திற்காக மதம் மாறுதல்

திருமண வயது சர்ச்சை