திருமணப்பதிவின் முக்கியத்துவம்

ஒரு திருமணத்தை  அரசு சார்-பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்வது தற்போதய கால கட்டத்தில் அவசியத்தேவையாக மாறி விட்டது. பதிவு செய்து அரசு திருமணச்சான்றிதழ் பெறாத திருமணங்கள் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்படாது என்கிற நிலையை நாம் அடைந்து விட்டோம். தமிழ்நாடு திருமணப் பதிவுச்சட்டம் - 2009 இன் படி, திருமணத்தை பதிவு செய்யாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். உண்மையில், குடிமக்களின் திருமணங்கள் முறைப்படுத்தப்படுவதும், ஆவணப்படுத்தப்படுவதும் , சமூகத்திற்கு  நல்லது தான். பல முறைகேடுகளை தடுப்பதற்கும் , பெண்களும்  ஆண்களும் தமக்குரிய சட்ட  உரிமைகளை எளிதில் பெறுவதற்கும் இது உதவும்.  எழுபது வயதைக் கடந்த முதியவர்களுக்குக்கூட இன்று திருமனச் சான்றிதழ் தேவைப்படுகிறது. வெளிநாட்டில் வசிக்கும் ஒரு நபர் , தமது பெற்றோர்களை தம்முடன் வசிக்க அழைத்துக்கொள்ள விரும்பினால், அவரது பெற்றோர்கள்தான் என்பதை நிறுவ, பெற்றோர்களின்  திருமணச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியமாகி விட்டது. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பெற்றோர்களின் திருமணச் சான்றிதழ் கோரப்படுகிறது. குடும்ப அடையாள அட்டையில் கணவன் அல்லது மனைவியின் பெயரை சேர்ப்பதற்கு திருமனச் சான்றிதழ் தேவைப்படுகிறது. நீதிமன்றங்களில் குடும்ப வழக்குகளை  திருமனச் சான்றிதழ் இல்லாமல் தாக்கல் செய்யவே முடியாது  என்கிற சூழல் உள்ளது. சொத்துரிமை மற்றும் வாரிசுரிமை போன்ற முக்கிய உரிமைகள் தொடர்பான காரியங்களிலும் திருமணச் சான்றிதழ் முக்கிய பங்கு வகிக்கிறது. தம்பதியர்கள் வீடு வாடகைக்கு கேட்டு செல்கிற போது , வீட்டு உரிமையாளர்கள் திருமணச் சான்றிதழ் கேட்பது பெருநகரங்களில் வழக்கமாகி விட்டது நகைச்சுவை அல்ல. எதார்த்தம்.
www.registermarriages.in

Comments

Popular posts from this blog

International Women's Day - History, Purpose and Practice

சர்வதேச பெண்கள் தினம் - வரலாறு, நோக்கம் மற்றும் நடைமுறை

Online search for Registered Marriages and apply for Marriage Certificate