Posts

Showing posts from February, 2023

Child Marriage Prohibition Act

Image
The Prohibition of Child Marriage Act 2006 makes any marriage between a girl under 18 years of age and a man under 21 years of age illegal. Some argue that child marriage leaves girls physically and mentally vulnerable. Such people also think that these children lack intellectual maturity, lack the mental strength to face problems and are always forced to depend on men. According to section 9,10,11 of the Prohibition of Child Marriage Act 2006, parents or guardians of child marriages, grooms, religious leaders officiating marriages, relatives, friends who participated in marriages, persons who assisted in marriages, organizations, marriage brokers, etc. They are considered guilty and are liable to imprisonment for 2 years or fine up to one lakhs rupees or both. Promoting and facilitating child marriage are punishable offences. www.registermarriages.in #MarriageAge #MarriageRegistration #MarriageCertificate

குழந்தை திருமண தடை சட்டம்

Image
குழந்தை திருமண தடைச் சட்டம் 2006-ன் படி பெண்ணுக்கு 18 வயதுக்கு கீழும், ஆணுக்கு 21 வயதுக்கு கீழும் நடைபெறும் எந்த திருமணமும் சட்டத்தை மீறிய குற்றச் செயலாகும். குழந்தை திருமணத்தால் பெண் குழந்தைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த குழந்தைகளுக்கு அறிவு முதிர்ச்சி குன்றி, பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மன வலிமை இழந்து எப்போதும் ஆண்களை சார்ந்து வாழும் சார்பு நிலைக்கு தள்ளப்படுவதாகவும் அத்தகையவர்கள் கருதுகிறார்கள். குழந்தை திருமண தடை சட்டம் 2006-ன் பிரிவு 9,10,11-ன் படி  குழந்தை திருமணத்தை நடத்திய பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், மணமகன், திருமணத்தை நடத்தி வைக்கும் மத தலைவர்கள், திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள், நண்பர்கள் , திருமணம் நடைபெற உதவி செய்த நபர்கள், அமைப்புக்கள், திருமண தரகர் ஆகிய அனைவரும் குற்றம் செய்தவர்களாகக் கருதப்பட்டு அவர்களுக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அல்லது ரூபாய் ஒரு லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்பட வகை செய்யப்பட்டுள்ளது. குழந்தை திருமணத்தை ஆதரிப்பதும், நடத்தி வைப்பதும் தண்ட...

Inter caste Marriages - Registration, Government Certificate and Procedures

Image
As far as marriage laws in India are concerned, there are no caste-specific laws. Inter-caste marriages can also be registered and a government marriage certificate can be obtained based on the marriage laws of the respective specific religions. It can also be registered under the Special Marriage Act - 1954. To obtain a mixed caste marriage certificate, the community certificate issued by the government must be submitted as an additional document at the time of marriage registration. Inter-caste marriages generally take place between different castes of Hinduism. Some state governments, such as Tamil Nadu, provide various benefits and gifts to inter-caste couples to encourage inter-caste marriages. But to get such benefits, one of the couple must belong to Dalit or tribal community. An ordinance issued by the Tamil Nadu government last year states that couples in mixed marriages will be given priority in government jobs. Children born to mixed marriages are issued a government communi...

ஜாதிக் கலப்புத் திருமணங்கள் - பதிவு , அரசு சான்றிதழ் மற்றும் வழிமுறைகள்

Image
இந்தியாவின் திருமணச் சட்டங்களைப் பொறுத்த அளவில், ஜாதிகளுக்கென்று தனியான சட்டங்கள் எதுவும் இல்லை. அந்தந்த குறிப்பிட்ட மதங்களுக்கான திருமணச் சட்டங்களின் அடிப்படையிலேயே ஜாதிக் கலப்புத் திருமணங்களையும் பதிவு செய்து அரசு திருமணச் சான்றிதழைப் பெற முடியும். சிறப்புத் திருமணச் சட்டம் - 1954 அடிப்படையிலும் பதிவு செய்யலாம்.  ஜாதிக் கலப்புத் திருமணச் சான்றிதழ் பெறுவதற்கு, அரசால் வழங்கப்படும் ஜாதிச் சான்றிதழ் , திருமணப் பதிவின் போது கூடுதல் ஆவணமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  பொதுவாக ஜாதிக் கலப்புத் திருமணங்கள் இந்து மதத்தின் பல்வேறு ஜாதியினருக்கிடையே நடைபெறுகிறது.  தமிழ்நாடு போன்ற சில மாநில அரசுகள், ஜாதிக் கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில், ஜாதிக் கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர்களுக்கு, பல்வேறு சலுகைகளையும், பரிசுகளையும் வழங்குகின்றன. ஆனால், அத்தகைய சலுகைகளைப் பெறுவதற்கு, தம்பதியர் இருவரில் ஒருவர் , தலித் அல்லது பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட அரசாணை ஒன்று, கலப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களுக்கு அரசு வ...

Self-respect marriage and registration details

Image
Marriages that take place without religious marriage rituals are called self-respect marriages. Self-respect marriages performed by Hindu couples are legally recognized. On 27 November 1967, the Self-respect Marriage Amendment Act was passed in the Tamil Nadu Legislative Assembly and received the President's assent on 28 January 1968. It was added as an amendment to Section 7(A) of the Hindu Marriage Act - 1955 Act. Father Periyar, a social reformer who lived in Tamil Nadu E.V.Ramasamy is known as the pioneer of the Self-Respect Marriage Act, according to which two Hindus of the same caste or of different castes could marry without any religious ceremony. No religious priest is needed to conduct these marriages. There is no need to tie a thaali or mangalsutra. Such marriages can be registered in the offices of Government Registrar's offices under Section 7 (A) of the Hindu Marriage Act - 1955 and obtain a Government Marriage Certificate. Self-respect marriages can only be legal...

சுய மரியாதைத் திருமணம் மற்றும் பதிவு விவரங்கள்

Image
மதங்களின் திருமணச்  சடங்குகளை தவிர்த்து விட்டு நடைபெறும் திருமணங்கள் சுய மரியாதைத் திருமணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்து மதத்தைச்சேர்ந்த தம்பதியர்கள் மேற்கொள்ளும் சுயமரியாதைத் திருமணங்கள் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 1967 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி, சுயமரியாதைத் திருமணத்திற்கான சட்டத் திருத்தம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, 1968 ஜனவரி 28 அன்று , குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப்பெற்றது. இந்து திருமணச் சட்டம் - 1955  சட்டத்தின் 7(A) பிரிவில் திருத்தமாக இது சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாழ்ந்த சமூக சீர்திருத்தவாதி தந்தை பெரியார் என்ற ஈ.வே. ராமசாமி அவர்கள் சுய மரியாதைத் திருமணச் சட்டத்தின் முன்னோடி என அழைக்கப்படுகிறார்.இதன்படி , ஒரே ஜாதியைச் சேர்ந்த அல்லது வெவ்வேறு ஜாதிகளைச்சேர்ந்த இரண்டு இந்துக்கள் எவ்வித மதச் சடங்குகளும் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாம். இத்திருமணங்களை நடத்தி வைப்பதற்கு மத குருமார்கள் எவரும் தேவைப்படாது. தாலி கட்ட வேண்டிய அவசியமும் இல்லை. இத்தகைய திருமணங்களை இந்து திருமணச் சட்டம் - 1955 பிரிவு 7 (A) அடிப்படையில், அரசு சார்பதி...