ஜாதிக் கலப்புத் திருமணங்கள் - பதிவு , அரசு சான்றிதழ் மற்றும் வழிமுறைகள்


இந்தியாவின் திருமணச் சட்டங்களைப் பொறுத்த அளவில், ஜாதிகளுக்கென்று தனியான சட்டங்கள் எதுவும் இல்லை. அந்தந்த குறிப்பிட்ட மதங்களுக்கான திருமணச் சட்டங்களின் அடிப்படையிலேயே ஜாதிக் கலப்புத் திருமணங்களையும் பதிவு செய்து அரசு திருமணச் சான்றிதழைப் பெற முடியும். சிறப்புத் திருமணச் சட்டம் - 1954 அடிப்படையிலும் பதிவு செய்யலாம். 

ஜாதிக் கலப்புத் திருமணச் சான்றிதழ் பெறுவதற்கு, அரசால் வழங்கப்படும் ஜாதிச் சான்றிதழ் , திருமணப் பதிவின் போது கூடுதல் ஆவணமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

பொதுவாக ஜாதிக் கலப்புத் திருமணங்கள் இந்து மதத்தின் பல்வேறு ஜாதியினருக்கிடையே நடைபெறுகிறது. 

தமிழ்நாடு போன்ற சில மாநில அரசுகள், ஜாதிக் கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில், ஜாதிக் கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர்களுக்கு, பல்வேறு சலுகைகளையும், பரிசுகளையும் வழங்குகின்றன. ஆனால், அத்தகைய சலுகைகளைப் பெறுவதற்கு, தம்பதியர் இருவரில் ஒருவர் , தலித் அல்லது பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட அரசாணை ஒன்று, கலப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கிறது. 

கலப்புத் திருமணத் தம்பதியர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, பெற்றோர்களின் விருப்பப்படி, தாய் அல்லது தந்தையின் ஜாதியைக் குறிப்பிட்டு அரசு ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

www.registermarriages.in 


#MarriageRegistration

#InterCasteMarriageCertificate

Comments

Popular posts from this blog

Chennai Register offices complete list

Online search for Registered Marriages and apply for Marriage Certificate

திருமணத்திற்காக மதம் மாறுதல்