குழந்தை திருமண தடை சட்டம்


குழந்தை திருமண தடைச் சட்டம் 2006-ன் படி பெண்ணுக்கு 18 வயதுக்கு கீழும், ஆணுக்கு 21 வயதுக்கு கீழும் நடைபெறும் எந்த திருமணமும் சட்டத்தை மீறிய குற்றச் செயலாகும்.

குழந்தை திருமணத்தால் பெண் குழந்தைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த குழந்தைகளுக்கு அறிவு முதிர்ச்சி குன்றி, பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மன வலிமை இழந்து எப்போதும் ஆண்களை சார்ந்து வாழும் சார்பு நிலைக்கு தள்ளப்படுவதாகவும் அத்தகையவர்கள் கருதுகிறார்கள்.

குழந்தை திருமண தடை சட்டம் 2006-ன் பிரிவு 9,10,11-ன் படி  குழந்தை திருமணத்தை நடத்திய பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், மணமகன், திருமணத்தை நடத்தி வைக்கும் மத தலைவர்கள், திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள், நண்பர்கள் , திருமணம் நடைபெற உதவி செய்த நபர்கள், அமைப்புக்கள், திருமண தரகர் ஆகிய அனைவரும் குற்றம் செய்தவர்களாகக் கருதப்பட்டு அவர்களுக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அல்லது ரூபாய் ஒரு லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்பட வகை செய்யப்பட்டுள்ளது.

குழந்தை திருமணத்தை ஆதரிப்பதும், நடத்தி வைப்பதும் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

www.registermarriages.in

#MarriageAge
#MarriageRegistration
#MarriageCertificate

Comments

Popular posts from this blog

International Women's Day - History, Purpose and Practice

சர்வதேச பெண்கள் தினம் - வரலாறு, நோக்கம் மற்றும் நடைமுறை

Online search for Registered Marriages and apply for Marriage Certificate