சுய மரியாதைத் திருமனச் சட்டத்தின் முன்னோடி

பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ.வெ.இராமசாமி அவர்கள் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும் , மூட நம்பிக்கையை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.

தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுய மரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ் பெற்றவை.

இவர் வசதியான முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக்கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வருணாசிரமம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார்.

தற்போது தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் , சுய மரியாதைத் திருமனச் சட்டத்தின் பிதா மகன் இவரே என்பதை இவரது 49 ஆவது நினைவு நாளான இன்று நன்றியோடு நினைவு கூறுகிறோம்.

See insights and ads
Like
Comment
Share

Comments

Popular posts from this blog

International Women's Day - History, Purpose and Practice

சர்வதேச பெண்கள் தினம் - வரலாறு, நோக்கம் மற்றும் நடைமுறை

Online search for Registered Marriages and apply for Marriage Certificate