தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்
இச்சட்டம் 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் , பல்வேறு தரப்பினரிடமிருந்து ( குறிப்பாக இஸ்லாமியர்கள்) எழுந்த எதிர்ப்புக்கள் காரணமாக , உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. 2009 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
இச்சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு , திருமணங்களை பதிவு செய்வது தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டது.
இதன் படி , திருமணம் நடந்து 90 நாட்களுக்குள் திருமணத்தை பதிவாளர் அலுவலகம் சென்று பதிவு செய்ய வேண்டும். திருமணம் முடித்து 90 நாட்களுக்குள் பதிவு செய்தால் கட்டணம் ரூபாய் 100 மட்டுமே செலுத்தினால் போதுமானது. திருமணம் முடித்து 91 முதல் 150 நாட்களுக்குள் பதிவு செய்தால் அபராத கட்டணம் ரூபாய் 50 சேர்த்து மொத்தம் ரூபாய் 150 செலுத்த வேண்டும். திருமணம் முடித்து 150 நாட்கள் கடந்த பிறகு பதிவு செய்தால் , அதிகபட்சமாக ரூபாய் 1300 வரை அபராதத்துடன் கூடிய கட்டணமாக செலுத்த நேரிடும்.
திருமணப் பதிவின்போது வயதுச்சான்று , இருப்பிடச் சான்று மற்றும் திருமணம் நடைபெற்ற இடம் ஆகியவற்றுக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
www.registermarriages.in
Comments
Post a Comment