இந்து திருமண சட்டம் - 1955

இந்து திருமண சட்டம் 1955 ஆம் ஆண்டு இந்து மதத்தை சேர்ந்தவர்களின் திருமணத்திற்காக இயற்றப்பட்டதாகும்.


இச்சட்டத்தின் மூலமாகவே இந்து சமய திருமணங்களும் திருமண முறிவுகளும் நீதிமன்றத்தில் முடிவெடுக்கப்படுகின்றன.

இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாழும் இந்துக்களுக்கும் மற்றும் இந்தியாவில் திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டை சேர்ந்த இந்துக்களுக்கும் இச்சட்டம் பொருந்தும்.

இந்து திருமண சட்டத்தின் அடிப்படையிலான திருமணத்தை பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யும்போது மூன்று சாட்சிகள் தேவைப்படுவார்கள்.

முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ திருமணங்களை பதிவு செய்யும்போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய மத நிறுவனத்தின் சான்றிதழ் இந்து திருமண சட்டத்தின் அடிப்படையிலான பதிவுகளுக்கு அவசியம் இல்லை.வயது மற்றும் இருப்பிடச் சான்றுடன் திருமணம் நடைபெற்றதற்கு சான்றான ஆவணங்கள் மட்டும் சமர்ப்பிக்கப்பட்டால் போதுமானது.

இந்து திருமண சட்டத்தின் அடிப்படையில் பெறப்படும் அரசு திருமண சான்றிதழில் தம்பதியர்களின் ஜாதி விபரங்களும் இடம்பெறும். இந்தியாவின் திருமண பதிவாளர் அலுவலகங்கள் மூலமாக வழங்கப்படும் திருமணச் சான்றிதழ்களில் தம்பதியர்கள் குறித்த அதிகப்படியான விபரங்கள் இடம் பெற்று இருக்கும் சான்றிதழ் இதுவே ஆகும்.

தம்பதியர்களில் யாராவது ஒருவருக்கு தொழு நோயோ மனநிலை பாதிப்போ இருந்தால் விவாகரத்து வழங்கலாம் என்று இந்து திருமண சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதியை பல தம்பதிகள் தவறாக பயன்படுத்துவதாக உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

www.registermarriages.in

Comments

Popular posts from this blog

International Women's Day - History, Purpose and Practice

சர்வதேச பெண்கள் தினம் - வரலாறு, நோக்கம் மற்றும் நடைமுறை

Online search for Registered Marriages and apply for Marriage Certificate