திருமணப் பதிவுகளுக்கு வாடிக்கையாளரின் கூகுள் கருத்துக்களைப் பெறுவதில் நேர்மை


கூகுள் கருத்திடல் பக்கத்தில் அளிக்கப்படும் வாடிக்கையாளரின் கருத்துக்கள், உண்மையில் ஒரு சமூக சேவை என்றே எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், அந்த குறிப்பிட்ட தொழில் அல்லது சேவை குறித்து, அந்த குறிப்பிட்ட நிறுவனத்துடன் தன்னுடைய அனுபவத்தை பொது வெளியில் பகிர்ந்து கொள்வதென்பது, பல்வேறு நன்மைகளை விளைவிக்கும். கெட்ட அனுபவங்களையும் இழப்புக்களையும் தவிர்ப்பதற்கும், நம்முடைய தேவைக்கான தரமான மற்றும் நேர்மையான நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதற்கும் உதவும். ஆனால், சில குறிப்பிட்ட துறைகளில், திருப்திகரமான அனுபவத்தைப் பெற்றிருந்த போதிலும், அந்த அனுபவத்தை பொது வெளியில் பகிர்ந்து கொள்வதற்கு பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தயங்குவார்கள். அதற்கு பல்வேறு வகையான காரணங்கள் இருக்கின்றன. அப்படி, கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு வாடிக்கையாளர்கள் தயங்கும் துறைகளுள் ஒன்றுதான் எமது திருமணப் பதிவு தொடர்பான சேவையும் ஆகும். அதற்காக குறுக்கு வழியில் முயன்று, நண்பர்கள் மற்றும் முகவர்கள் மூலமாக போலியான முறைகளில் கூகுள் கருத்துப்பக்கத்தை நிரப்புபவர்கள் ஏராளம். அத்தகைய குறுக்கு வழிகள் எதையும் கையாளாமல், கருத்துக்களைப் பகிர விருப்பமுள்ள(அப்படிப்பட்டவர்கள் அரிது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்) வாடிக்கையாளர்களிடமிருந்து மட்டுமே நேர்மையான முறையில் பெறப்பட்ட கூகுள் ரிவ்யூக்கள்தான் எங்கள் சேவையின் தரத்திற்கு சான்று பகர்கின்றன. இது எங்கள் நிறுவனத்தின் பெருமிதம் என்று சொல்லிக்கொள்வதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை. ரிவ்யூக்களைப் பெறுவதில் நாங்கள் கடைப்பிடிக்கும் நேர்மையை எமது சேவையிலும் நீங்கள் காணலாம்.

Comments

Popular posts from this blog

International Women's Day - History, Purpose and Practice

சர்வதேச பெண்கள் தினம் - வரலாறு, நோக்கம் மற்றும் நடைமுறை

Online search for Registered Marriages and apply for Marriage Certificate