திருமணச் சான்றிதழ் பெறுவதற்கான தமிழ்நாடு அரசின் ஆன்லைன் திருமணப் பதிவிற்கான அதிகாரபூர்வ இணையத்தளம்

தமிழ்நாட்டில் ஆன்லைன் திருமணப் பதிவு வழியாக தமிழ்நாடு அரசின் திருமணச் சான்றிதழைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பார்ப்போம். தமிழ்நாடு அரசின் பதிவுத்துறையின் சார்பில், https://tnreginet.gov.in/portal/ என்கிற பெயரில் இயங்கி வரும் இணையத்தளம் திருமணப் பதிவுகள் தொடர்பான சேவைகளையும் வழங்கி வருகிறது . திருமணப் பதிவுகளைச் செய்து, அரசு திருமணச் சான்றிதழ் பெறுவதற்கு, முதலில், மேற்கண்ட இனைய தளத்தில், ஆன்லைன் வழியாக விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து , உரிய ஆவணங்களை விண்ணப்பப் படிவத்துடன் இணைக்க வேண்டும். அதன் வழியாக , ஆன்லைன் அப்பாயிண்ட்மெண்ட் பெற முடியும். ஆன்லைன் அப்பாயிண்ட்மெண்ட் பெற்ற பிறகுதான், உரிய நேரத்தில், சார்-பதிவாளர் அலுவலகம் சென்று திருமணப் பதிவை மேற்கொண்டு, திருமணச் சான்றிதழைப் பெற முடியும். விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்தல் மற்றும் திருமணப் பதிவிற்கான ஆன்லைன் அப்பாயிண்ட்மெண்ட் பெறுதல் போன்ற பணிகளை மட்டுமே ஆன்லைன் வழியாக மேற்கொள்ள முடியும். திருமணப் பதிவை ஆன்லைன் வழியாக மேற்கொள்ள முடியாது. திருமணச் சான்றிதழையும் ஆன்லைன் வழியாகப் பெற முடியாது. ஆன்லைன் வழியாக திருமணத்தை பதிவு செய்து , அரசு திருமணச் சான்றிதழைப் பெற முடியும் என்பது ஒரு மோசடியே ஆகும். www.registermarriages.in marriagecertificatechennai.blogspot.com #onlinemarriagecertificate #onlinemarriageregistration #onlinemarriageregistrationintamilnadu #Online_Marriage_Certificate_Chennai #OnlineMarriageRegister #OnlineMarriageRegistration #OnlineRegisterMarriage #OnlineCourtMarriage

Comments

Popular posts from this blog

Chennai Register offices complete list

Online search for Registered Marriages and apply for Marriage Certificate

திருமணத்திற்காக மதம் மாறுதல்