கலப்புத் திருமணம் மற்றும் அரசு சலுகைகள்:-


இரண்டு வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் செய்து கொள்ளும் திருமணங்கள் கலப்புத் திருமணங்கள் என பொதுவாக அழைக்கப்படுகின்றன.

இவ்வாறு கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர்களுக்கு,
தமிழ்நாடு அரசு சில சலுகைகளை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

குறிப்பிட்ட அளவு பணம், குறிப்பிட்ட அளவு தங்கம் மற்றும்
தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பில் முன்னுரிமை போன்றவை
குறிப்பிடத்தக்க சலுகைகள் ஆகும்.

இத்தகைய சலுகைகளைப் பெறுவதற்கு, தம்பதியர் இருவரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடினர் சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

தம்பதியர் இருவரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்தவராக இல்லாத பட்சத்தில், மேற்கண்ட சலுகைகள் கிடைக்காது.

தம்பதியர் இருவரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்து, மற்றொருவர் இந்து அல்லாத வேறு மதங்களைச் சேர்ந்தவராக இருந்தாலும்,
அரசின் சலுகைகள் கிடைக்கப்பெறும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கி வரும், சமூக நலத்துறை அலுவலகங்களில் கலப்புத் திருமணச் சலுகைகள் குறித்த முழு விபரங்களை அறியலாம்.

www.registermarriages.in

MarriageCertificateChennai.blogspot.com

#InterCasteMarriageRegistration #Inter_Caste_Marriage_Certificate #Inter_Caste_Marriage_Registrar #Inter_Caste_Marriage_Register #InterReligionMarriageCertificate #InterFaithMarriageCertificate
#MarriageRegistration #MarriageCertificate #LoveMarriageCertificate
#InterStateMarriageCertificate #HinduMarriageCertificate #SelfRespectMarriageCertificate
#RegisterMarriage #CourtMarriageCertificate

Comments

Popular posts from this blog

International Women's Day - History, Purpose and Practice

சர்வதேச பெண்கள் தினம் - வரலாறு, நோக்கம் மற்றும் நடைமுறை

Online search for Registered Marriages and apply for Marriage Certificate