முஸ்லீம் மற்றும் கிறித்துவ திருமணங்களை சிறப்புத் திருமனச் சட்டத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டுமா ?
முஸ்லீம் மற்றும் கிறித்துவ திருமணங்களை சிறப்புத் திருமனச் சட்டத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டுமா ?
2009 ஆம் ஆண்டுக்கு முந்தைய முஸ்லீம் திருமணங்களை சிறப்புத்திருமனச் சட்டத்தின் அடிப்படையிலேயே பதிவு செய்ய முடியும். 2009 ஆம் ஆண்டுக்கு பிந்தைய முஸ்லீம் திருமணங்களை தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யலாம். திருமணம் நடந்து 150 நாட்களுக்கு பிறகு பதிவு செய்யும்போது , தாமதத்திற்கான கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
அதே போல 2009 ஆம் ஆண்டுக்கு முந்தைய கிறித்துவத் திருமணங்களை சிறப்புத் திருமனச் சட்டம் மற்றும் கிறித்துவத் திருமனச் சட்டம் ஆகிய திருமனச் சட்டங்களின் அடிப்படையில் பதிவு செய்யலாம். 2009 ஆம் ஆண்டுக்கு பிந்தைய கிறித்துவத் திருமணங்களை தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் மற்றும் கிறித்துவத் திருமனச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் பதிவு செய்து சான்றிதழ் பெறலாம்.
Comments
Post a Comment